ஆயிரம் மோடிகள் வந்தாலும் தடுக்க முடியாது: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

Webdunia
திங்கள், 1 மே 2023 (18:16 IST)
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதை ஆயிரம் மோடிகள் வந்தாலும் தடுக்க முடியாது என தமிழக காங்கிரஸ் தலைவர். அழகிரி தெரிவித்துள்ளார். 
 
கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவது உறுதி என்றும் ஆயிரம் மோடிகள் வந்தாலும் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதை தடுக்க முடியாது என்றும் அழகிரி தெரிவித்துள்ளார். 
 
சுதந்திரம் அடைந்த இந்தியாவை 55 ஆண்டுகள் ஆண்ட பெருமை காங்கிரஸ் கட்சிக்கு உண்டு என்றும் இந்தியாவின் வளர்ச்சியில் பெரும் பங்கு காங்கிரஸ் ஆட்சிக்கு மட்டுமே ஒன்று என்றும் அவர் தெரிவித்தார்.
 
 மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் பொருளாதார சீரழிவுக்கு பிரதமர் மோதி வித்திட்டு உள்ளார் என்றும் தனது மக்கள் விரோத நடவடிக்கையை மூடி மறைப்பதற்காகவும் கர்நாடக மக்களை ஏமாற்றமும் காங்கிரஸ் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவர் கூறி வருகிறார் என்றும் தெரிவித்தார். 
 
ராகுல் காந்தியின் சூறாவளி சுற்றுப்பயணம் பயணத்தால் பாஜக ஆட்சி அகற்றப்பட்டு கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதி என்றும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்