‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை தடை செய்ய வேண்டும்: முதல்வர் பிரனாய் விஜயன் வலியுறுத்தல்..!

ஞாயிறு, 30 ஏப்ரல் 2023 (14:32 IST)
‘தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என கேரளா முதல்வர் பிரனாய் விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மதச்சார்பின்மை கொண்ட கேரளாவில் திட்டமிட்டு பிரிவினை வாதத்தை தூண்டும் விதமாக தி கேரளா ஸ்டோரி என்ற இந்தி படத்தின் டிரைலர் அமைந்துள்ளது என்றும் சங் பரிவாரின் கொள்கையை பரப்புவதற்காக எடுக்கப்பட்ட படம் தான் இது என்பதை ட்ரைலரிலிருந்து பார்க்கும்போது தெரிந்து கொள்ள முடிகிறது என்றும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சி ‘தி கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கேரளாவை சேர்ந்த 32,000 இந்து மற்றும் கிறிஸ்துவ பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு இஸ்லாம் மதத்திற்கு கட்டாயமாக மத மாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐ அமைப்பில் இணைக்கப்படுவது போன்ற காட்சிகள் 'தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் மே ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்