பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், மாதம் ரூபாய் 2000 உள்பட பல அறிவிப்புகளை காங்கிரஸ் தரப்பிலிருந்து வெளியிட்டது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் வருடத்திற்கு மூன்று சிலிண்டர் இலவசம், தினமும் அரை லிட்டர் பால் மற்றும் மாதம் ஐந்து கிலோ அரிசி இலவசம், வீடற்ற ஏழைகளுக்கு 10 லட்சம் வீடுகள் இலவசம் மற்றும் பட்டியல் இனத்தவர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் நிரந்தர வைப்பு தொகை என்று பல்வேறு சலுகைகளை கர்நாடக பாஜக தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.