டெல்லியில் போராட்டம் செய்யும் வீராங்கனைகளுக்கு துணை நிற்போம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 1 மே 2023 (18:04 IST)
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு உறுதுணையாக இருப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். 
 
பாஜக எம்பி மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் இந்த போராட்டத்திற்கு பல அரசியல் கட்சிகள் ஆதரவு கொடுத்து வருகின்றன என்பதும் தெரிந்ததே. 
 
சமீபத்தில் கூட பிரியங்கா காந்தி போராட்டம் செய்து வரும் வீராங்கனைகளை நேரில் சந்தித்து தனது ஆதரவை கொடுத்தார். இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களும் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது
 
இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்த நமது மற்போர் வீரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி, சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் காண நெஞ்சம் பதைக்கிறது.
 
அவர்களைத் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திரு. புதுகை அப்துல்லா அவர்கள்  இன்று தி.மு.க. சார்பில் சந்தித்து ஆதரவைத் தெரிவித்துள்ளார். நமது மற்போர் வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக உடன் நிற்போம்!
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்