பப்ஜி-க்கு நோ எண்ட்ரி: மத்திய அரசு திட்டவட்டம்!!

Webdunia
வெள்ளி, 18 டிசம்பர் 2020 (17:41 IST)
பப்ஜி மொபைல் இந்தியா என்னும் தயாரிப்பை இந்தியாவில் தொடங்க அனுமதியில்லை என மத்திய அரசு திட்டவட்டம். 
 
கடந்த செப்டம்பர் மாதம் பப்ஜி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கும், டிக்டாக் உள்ளிட்ட செயலிகளுக்கும் அதிரடியாக தடை விதிக்கப்பட்டது. மேலும், யூசி பிரவுசர், ஷேர் இட் உள்ளிட்ட ஆப்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.
 
இதனிடையே, பப்ஜி இந்தியா என்ற பெயரில் மீண்டும் பப்ஜி விளையாட்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானது. அரசின் வழிமுறைகளை பின்பற்றி பப்ஜி இந்தியா கேம் அறிமுகப்படுத்த இருப்பதாகவும் கூறப்பட்டது. 
 
ஆனால் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் பப்ஜி மொபைல் இந்தியா என்னும் தயாரிப்பை இந்தியாவில் தொடங்க அனுமதியில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்