பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து யோகாசனத்தை முன்னிறுத்து வருகிறது. ஆண்டுதோறும் உலக யோகா தினம் கொண்டாடிவந்த நிலையில் இப்போது யோகாசனத்தை விளையாட்டு போட்டிகளில் ஒன்றாக அறிவித்துள்ளது. இதன் மூலம் யோகா உலகம் முழுவதும் சென்று சேரும் என்று சொல்லப்படுகிறது. ஆயுஷ் இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆகியோர் இதை உறுதிப்படுத்தினர்.