வேளாண் சட்டநகலை சட்டசபையில் கிழித்தெறிந்த முதல்வர்: பெரும் பரபரப்பு

வியாழன், 17 டிசம்பர் 2020 (17:12 IST)
மத்திய அரசின் புதிய வேளாண் மசோதாவிற்கு ஒரு சில மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது மட்டுமின்றி ஒருசில மாநில விவசாயிகள் மிகப்பெரிய போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக டெல்லியில் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கில் கூடி கடந்த 20 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர் 
 
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் ஆரம்பம் முதலே வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இன்று சட்டசபையில் வேளாண் சட்ட நகலை கிழித்து எறிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கொரோனா பேரிடர் நேரத்தில் புதிய வேளாண்மை சட்டங்களை அவசர அவசரமாக கொண்டுவர வேண்டிய தேவை என்ன என்ற கேள்வி எழுப்பிய முதல்வர் கெஜ்ரிவால், சட்டப்பேரவையில் வேளாண் சட்ட நகலை கிழித்து எறிந்து மத்திய அரசுக்கு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். ஒரு மாநில முதல்வரே மத்திய அரசு அமல்படுத்திய சட்ட நகலை சட்டசபையில் கிழித்தெறிந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்