மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தே சில ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், கட்டுமான பணிகள் அடிக்கல் நாட்டிய நிலையிலேயே உள்ளதாக கூறப்படுகிறது. எய்ம்ஸ் மருத்துவமனைக்காக பெறப்பட்ட நிலப்பகுதியில் சுற்றுசுவர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுவது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்டபோது ”மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காக ஜப்பான் ஜைக்கா நிறுவனங்களிடையே கடன் ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை. கடன் கிடைத்த பின்னர் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கும்” என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.