”நாங்க ஆட்சிக்கு வந்தா புது ஐபிஎல் டீம்..!” – ஆஃபர்களை அள்ளி விடும் காங்கிரஸ்!

Webdunia
புதன், 25 அக்டோபர் 2023 (11:46 IST)
இந்தியாவில் மத்திய பிரதேசம், மிசோரம், தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.



மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் நவம்பர் மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜக கட்சியின் சிவராஜ்சிங் சவுகான் ஆட்சி நடந்து வருகிறது. ஆட்சியை தக்க வைக்க பாஜக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில் கர்நாடகா வெற்றி ஃபார்முலாவை மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் பரிசோதனை செய்து வருகிறது.

இலவச ஹெல்த் இன்சூரன்ஸ், ஓபிசி இட ஒதுக்கீடு, மகளிர்க்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை என வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறது காங்கிரஸ். மேலும் இளைஞர்களை ஈர்ப்பதற்காக தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஐபிஎல்லில் மத்திய பிரதேசம் பெயரில் புதிய அணி உருவாக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளது காங்கிரஸ்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்