அதிருப்தியால் ராஜினாமா செய்த அமைச்சர். இமாச்சல் பிரதேசத்தில் கவிழ்கிறதா காங். அரசு?

Siva
புதன், 28 பிப்ரவரி 2024 (14:21 IST)
இமாச்சல பிரதேச மாநிலத்தில் திடீரென அமைச்சர் ஒருவர் அதிருப்தி காரணமாக ராஜினாமா செய்து உள்ளதை அடுத்து அங்கு காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலை இருப்பதாக கூறப்படுகிறது.

இமாச்சலப் பிரதேசத்தில் மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் அதில் ஆறு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்து பாஜக வேட்பாளரை வெற்றி பெறச் செய்தனர்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பாஜக எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்து நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் மேலும் சில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜக பக்கம் சாய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் முதல்வர் சுக்விந்த் சுகு தலைமையிலான ஆட்சி மீது அதிருப்தி தெரிவித்து அமைச்சர் விக்ரமாதித்யா சிங் என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் அங்கே காங்கிரஸ் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் பாஜக எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்து பேசியதாகவும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாஜக கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அம்மாநிலத்தில் பதட்டமான அரசியல் சூழ்நிலை நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்