24 வயது இளம்பெண்ணை கடித்து குதறிய சிறுத்தை.. வேலூரில் அதிர்ச்சி சம்பவம்..!

Mahendran

வியாழன், 19 டிசம்பர் 2024 (12:04 IST)
காட்டுப்பகுதியில் இயற்கை உபாதை கழிக்க சென்ற 24 வயது இளம் பெண்ணை திடீரென சிறுத்தை தாக்கி கடித்து குதறிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம்  கேவி குப்பம் என்ற பகுதியில் 24 வயது அஞ்சலி என்ற இளம் பெண் நேற்று மாலை தனது வீட்டின் அருகே இயற்கை உபாதை கழிக்க சென்ற போது, திடீரென ஒரு பெரிய சிறுத்தை ஒன்று அவரை தாக்கி கடித்து குதறி உள்ளது.  

 இந்த சம்பவத்தை நேரில் பார்த்த இளைஞர் ஒருவர் ஊருக்குள் ஓடி சென்று தகவல் கூறிய நிலையில், ஊர் மக்கள் தடி கம்புகளுடன் விரைந்து வந்தனர். அப்போது அஞ்சலி ரத்த வெள்ளத்தில் கை கால் கடித்து துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அஞ்சலியின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர். மேலும், சிறுத்தையின் நடமாட்டம் குறித்து விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த சிறுத்தை எங்கிருந்து வந்தது, இப்போது எந்த பகுதியில் உலாவி கொண்டிருக்கிறது என்பதை கண்டுபிடிக்க வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்