இதுகுறித்து தேர்தல் ஆணையர் ராஜீவ் கூறியபோது, முடக்கப்பட்ட ஆதார் அட்டைகளால் ஒருவர் வாக்களிப்பதை யாராலும் தடுக்க முடியாது, அவர்கள் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள ஆவணங்களில் ஏதாவது ஒன்றைக் காண்பித்து தேர்தலின்போது வாக்களிக்கலாம் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சுகேந்து சேகர் ராய் இதுகுறித்து கூறியபோது, மேற்கு வங்கத்தில் ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளன, வாக்காளர் பட்டியலில் இருந்து ஏராளமான நபர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இன்று ஒரே நாளில் மட்டும் 500 வாக்காளர்களின் ஆதார் எண்கள் மேற்கு வங்கத்தில் முடக்கப்பட்டுள்ளன. இது சட்டவிரோதம். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். இது தொடர்பான விசாரணையை தேர்தல் ஆணையம் நடத்தவேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்.