ராகுல்காந்திதான் என்னை தள்ளிவிட்டார்.. மண்டை உடைந்த பாஜக எம்.பி குற்றச்சாட்டு! நாடாளுமன்ற களேபரம்!

Prasanth Karthick

வியாழன், 19 டிசம்பர் 2024 (12:06 IST)

நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் ஏற்பட்ட களேபரத்தில் பாஜக எம்.பி தலையில் அடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் அதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன. இதுகுறித்து விளக்கமளித்த அமித்ஷா, தான் அம்பேத்கர் குறித்து தவறாக ஏதும் பேசவில்லை என்றும், அது ஏஐ மூலமாக காங்கிரஸார் தவறாக திரித்து வெளியிட்டது என்றும் குற்றம் சாட்டினார்.

 

இந்நிலையில் இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது முதலே எதிர்க்கட்சியினர், அம்பேத்கர் விவகாரத்தில் அமித்ஷாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியதுடன், ஜெய்பீம் என்றும் கோஷம் எழுப்பி வந்தனர். பதிலுக்கு பாஜகவினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நாடாளுமன்றமே களேபரமானது.
 

ALSO READ: கேரள முதல்வருடன் கைகுலுக்க தெரிந்த ஸ்டாலினுக்கு இதை செய்ய திராணியில்லையா? ஈபிஎஸ் ஆவேசம்
 

இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக பாஜக எம்.பி பிரதாப் சந்திர சாரங்கியின் மண்டை உடைந்து ரத்தம் வழிந்தது. உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் “நான் படிக்கட்டுக்கு அருகில் நின்றபோது ராகுல்காந்தி என் பக்கத்தில் வந்து ஒரு எம்.பியை என் மீது தள்ளிவிட்டார். அதனால் நான் கீழே விழுந்து என் மண்டை உடைந்தது” எனக் கூறியுள்ளார். இந்த களேபரத்தால் மேலும் பரபரப்பு எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்