ரூ.1145 கோடி மதிப்பீட்டில் கங்கை நதியைத் தூய்மைபடுத்தும் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தூய்மை கங்கா தேசிய இயக்கத்தின் 45 வது குழுகூட்டம் இன்ற் டெல்லியில் நடந்தது. இதில், தலைமை இயக்குனர் ஜி.அசோக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், ரூ.1145 கோடி மதிப்பீட்டில் கங்கை நதியை தூய்மை செய்தல், வடிகால் மேலாண்மை, தொழில்துறை மாசுக்கட்டும், ஆற்றுப்படுகையை மேம்படுத்துவதுடன், கழிவு நீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட 14 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த தகவலை மத்திய ஜல்சக்தி அமைச்சகம் இன்று தகவல் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.