ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட பிரதமர் மோடி....

வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (22:02 IST)
பிரதமர் மோடி, இன்று சாலையில் ஆம்புலன்ஸ் செல்ல வழிவிட்டுள்ளார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
 

நாட்டில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.  இரண்டு நாட்கள் பயணமாக மோடி, அவர் சொந்தமான குஜராத்திற்குச் சென்றார்.

நேற்று அகமதாபாத்தில் 36 வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை அவர் தொடங்கி வைத்த நிலையில், பாவ் நகர் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில், ரூ.6 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தொடங்கிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து    காந்தி நகர் மற்றும் மும்பை செண்டிரல் இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை கொடியசைத்து தொடங்கிவைத்தார் மோடி.

பின்,   காந்தி நகரில் இருந்து அகமதாபாத்திற்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் மோடி பயணித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்னதாக, அவர் காந்தி  நகரில் இருந்து, அகமதாபாத் நகருக்குப் பாதுகாப்பு வாகனங்களுடன் காரில் சென்றுகொண்டிருக்கும்போது, ஒரு ஆம்புலன் அவசரமாக வருவதைப் பார்த்த அவர், தம் வாகனத்தை ஒதுக்கி நிறுத்திவைத்து, ஆம்புலன்ஸ் சென்றபின் அவர் வாகனம் சென்றது.

பிரதமர் மோடியின் செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்