திமுக அரசின் சர்வாதிகார போக்குக்கு மக்கள் விரைவில் முடிவு -அண்ணாமலை டுவீட்

சனி, 1 அக்டோபர் 2022 (13:20 IST)
கண்டக்டரிடம் வலுக்கட்டாயமாக டிக்கெட் கேட்ட மூதாட்டி மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் அமைச்சர் பொன்முடி ஓசியில் பெண்கள் பேருந்துகளில் செல்கிறார்கள் என்று கூறினார்

இதற்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் சமீபத்தில், மூதாட்டி ஒருவர் அரசு பேருந்தில் செல்லும்போது ஓசியில் போகமாட்டேன் என்று நடத்துனரிடம் வாக்குவாதம் செய்து காசு கொடுத்து டிக்கெட் கேட்டார். ஆனால் கண்டக்டர் டிக்கெட் கொடுக்க மறுத்துவிட்டார்

 
இந்த நிலையில் தற்போது பேருந்தில் டிக்கெட் கேட்டு தகராறு செய்த மூதாட்டி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன்  டுவிட்டர் பக்கத்தில், "ஓசி" டிக்கெட் என்று ஏழ்மையை ஏளனம் செய்த திறனற்ற திமுக அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்த மூதாட்டியின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதை @BJP4TamilNadu வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்த @arivalayam அரசின் சர்வாதிகார போக்குக்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள் என்று பதிவிட்டுள்ளார்.
 

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்