12 நாள் பயணமாக அமெரிக்கா செல்லும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (16:54 IST)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 12 நாள் பயணமாக அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
 
அமெரிக்காவில் இளம் அரசியல் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற உள்ள இடத்தில் இந்த முகாமில் கலந்துகொள்வதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அமெரிக்கா செல்ல இருக்கிறார் 
 
இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்க புறப்படும் அண்ணாமலை அமெரிக்காவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருக்கிறார் என்றும் குறிப்பாக கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அடுத்த மாதம் 12ஆம் தேதி சென்னை திரும்புவார் என்று பாஜக தெரிவித்துள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்