மீண்டும் தடம்புரண்ட ரயில்.. காரணத்தை ஆராயும் ரயில்வே அதிகாரிகள்..!

Siva
வெள்ளி, 25 அக்டோபர் 2024 (15:36 IST)
இந்தியாவில் கடந்த சில நாட்களாக ரயில் விபத்துக்கள் அதிகரித்து கொண்டே வரும்   மீண்டும் ஒரு சரக்கு ரயில் தடம் புரண்டதாகவும், இந்த ரயில் தடம் புரண்டதற்கான காரணத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் இருந்து உத்தர பிரதேசம் மாநிலத்திற்கு சரக்கு ரயில் ஒன்று செல்லும் நிலையில் இன்று காலை திடீரென ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன. பயிர்களை ஏற்றிச் சென்ற இந்த சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்ட விபத்தில் உயிரிழப்பு அல்லது காயம் என்று எதுவும் இல்லை என்றும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து, தடம் புரண்ட பெட்டிகளை மீட்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், தடம் புரண்டதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை செய்யத் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்று காலை கன்னியாகுமரி சென்ற பயணிகள் ரயிலில் வெட்டிகளுக்கும் என்ஜினுக்கும் இடையே இருந்த இணைப்பு கப்ளிங் கழண்டு விழுந்ததால்  என்ஜின் தனியாக ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் ஒரு ரயில் விபத்து குறித்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்