இந்த நிலையில், இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நிலையில், சற்று முன் வரை ஏழு விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரரான ஜெயஸ்வால் 30 ரன்களும், சுப்மன் கில் 30 ரன்களும் எடுத்தனர். கேப்டன் ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டான நிலையில், விராட் கோலி ஒரு ரன்னில் அவுட்டானார்.
அதனை அடுத்து, ரிஷாப் பண்ட் 18 ரன்களும், அஷ்வின் 4 ரன்களும் எடுத்த நிலையில் தற்போது, ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் விளையாடி வருகின்றனர்.
இந்திய அணியை காப்பாற்றி, நியூசிலாந்து அணியின் ஸ்கோரை நெருங்கும் நிலைக்கு ஜடேஜா-வாஷிங்டன் ஜோடி கொண்டு வருவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். நியூசிலாந்து அணியின் சாட்னர் மிட்செல் சிறப்பாக பந்துவீசி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்; பிலிப்ஸ் இரண்டு விக்கெட்டுகளையும் டிம் சவுதி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.