மகளை ரூ, 10 ஆயிரத்துக்கு விற்ற தந்தை : 20 பேர் கற்பழித்த கொடூரம் !

Webdunia
வியாழன், 16 மே 2019 (16:26 IST)
டெல்லியைச் சேர்ந்தவர் ஒரு இளம் பெண். அவருக்கு அம்மா, அப்பா இருவருமே இல்லை. சித்தி மட்டுமே இருக்கிறார். சித்தி நாளும் கொடுமைப்படுத்தி இவரை சித்தரவதை செய்துள்ள்ளார்.
இதில் சோகமான சம்பவம் என்னவென்றால் இவருக்கு 14 இருக்கும் பொழுதே திருமணம் ஆனதுதான். 
 
இவருடைய அப்பா ரூ. 10000 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதுதான் இந்தப் பெண்ணுக்கு நேர்ந்துள்ள உச்சகட்ட கொடுமை. இப்பெண்ணை விலைக்கு வாங்கியவர் இவரை வீட்டு வேலைக்கு அனுப்பியுள்ளார்.
 
அப்படி இவர் வீட்டு வேலைக்குச் செல்லும் போதுதான் பல மிருகங்கள் இவரை பலமுறை பலாத்காரம் செய்துள்ளனர்.
 
இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் இவரது புகாரை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று தெரிகிறது.
 
இந்நிலையில் தனது சோகத்தை ஆற்றிக்கொள்ள நினைத்த அவர் தனது நண்பன் சுனிலிடம் இந்தக் கொடுமைகளை எல்லாம் கூறியுள்ளார். பின்னர் யாரும்  எதிர்பார்க்காத விதமாக தன் உடலில் நெருப்பைப் பற்ற வைத்துக்கொண்டார்.
 
தற்போது 80% காயங்களுடன் டெல்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெண்ணின் உறவினர்கள் அனைவரும் கைவிட்ட நிலையில் சுனில் மட்டுமே அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டி பார்த்துவருகிறார்.
 
இதுசம்பந்தமாக டெல்லி மகளிர் ஆணையம் புகார் அளிக்கவே இதில் தொடர்புடைய 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
 
இப்பெண் போலீஸாரிடம் தெரிவித்த வாக்குமூலத்தில் ''இனிமேல் யாரும் என்னை பலாத்காரம் செய்ய முடியாது '' என்று தெரிவித்துள்ளது அனைவரது கண்களிலும் கண்ணீரை வரவழைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்