திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

Mahendran

சனி, 29 மார்ச் 2025 (11:34 IST)
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் கடந்த புதன்கிழமை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு இரண்டரை மணிநேரத்திற்கு மேல் நீடித்ததாக கூறப்படுகிறது. கூட்டணி தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
ஆனால், இதை மறுத்து, "கூட்டணி குறித்து எந்த விவாதமும் விவாதிக்கப்படவில்லை," என்று டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.
 
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று மதியம் டெல்லி புறப்பட்டதாக தகவல் வெளியாகியது. அங்கு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு முன்னதாகவே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க செங்கோட்டையன் நேரம் கேட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இதையடுத்து, செங்கோட்டையனின் டெல்லி பயணம் தொடர்பாக எழுந்த கேள்விக்கு, எடப்பாடி பழனிசாமி எந்த பதிலும் அளிக்க மறுத்துவிட்டார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்