2 பெண்களை காதலித்து இருவருக்கும் ஒரே மேடையில் தாலி கட்டிய இளைஞர்.. ஆச்சரிய தகவல்..!

Mahendran

சனி, 29 மார்ச் 2025 (09:52 IST)
தெலுங்கானா மாநிலத்தில் 25 வயது இளைஞர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலித்து, இருவரையும் ஒரே மேடையில் திருமணம் செய்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
தெலுங்கானாவில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் சூரியதேவ், அதே கிராமத்தைச் சேர்ந்த லால் தேவி மற்றும் ஜல்கர் தேவி ஆகிய இரண்டு பெண்களை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தார். அவர் இருவரையும் காதலிப்பது அந்த இரண்டு பெண்களுக்கும் தெரிந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், இருவரையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்ய விரும்புவதாகவும், ஒரே மேடையில் தாலி கட்ட விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். இதை அவரது பெற்றோர்கள் சம்மதித்து, திருமணத்தை நடத்தி வைத்தனர்.
 
இந்நிலையில், இரண்டு காதலிகளையும் ஒரே மேடையில் வைத்து, சூரியதேவ் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் ஏராளமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
 
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி, பல்வேறு கருத்துக்களை பெற்றுக்கொண்டு வருகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்