அதிக வரி விதிக்கும் இந்தியா என்று சொன்ன டிரம்ப்.. இப்போது ஏன் திடீர் மாற்றம்?

Mahendran

சனி, 29 மார்ச் 2025 (11:28 IST)
அதிக விரைவு வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று சொன்ன அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தற்போது திடீரென இந்திய பிரதமர் மோடி எனது நெருங்கிய நண்பர் என்று கூறி இருப்பது உலக நாடுகள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடியை தனது நெருங்கிய நண்பராக புகழ்ந்து பாராட்டியதோடு, வர்த்தக பேச்சுவார்த்தைகள் பற்றியும் கருத்து தெரிவித்தார்.
 
அதிபர் டிரம்ப் உரையாற்றியபோது, "நான் உங்களுக்குப் பிரதமர் மோடியைப் பற்றிப் பேச விரும்புகிறேன். அவர் மிகவும் சாணக்கியமானவர், மேலும் எனது நல்ல நண்பர். சமீபத்தில் அவர் இங்கே வந்திருந்தார். எப்போதுமே நாங்கள் நல்ல தொடர்பில் இருப்போம். இந்தியா உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாகும், இது சிறந்த நிலைமையில்லை. அதேசமயம், இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் நன்கு நடந்து வருகிறது" என்று கூறினார்.
 
டிரம்ப், இரண்டாவது முறை அமெரிக்க அதிபராக பதவி வகித்த சில நாட்களுக்குள்ளாகவே பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். இதற்கு முன்பு, இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் அமெரிக்காவுக்கு அதிக வரி விதிப்பதாகவும், இதற்குப் பதிலாக ஏப்ரல் 2 ஆம் தேதிமுதல் எதிர்வினை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
 
இந்நிலையில், அவரது சமீபத்திய கருத்துகள் இந்தியா - அமெரிக்கா வர்த்தக உறவுகளில் மாற்றங்களை உருவாக்கக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்