அயோத்தியில் குவிந்த பக்தர்கள்..! கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம்.!!

Senthil Velan
செவ்வாய், 23 ஜனவரி 2024 (16:49 IST)
அயோத்தி ராமர் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் பலர் காயம் அடைந்தனர். தரிசனம் செய்வதற்காக அதிகளவில் பக்தர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
 
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா திங்கள் கிழமை வெகு விமர்சியாக நடைபெற்றது. இன்று முதல் பகவான் ராமரை அனைவரும் தரிசிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக நேற்று இரவு முதலே பக்தர்கள் அயோத்தி ராமர் கோயில் முன் வரிசையில் நிற்கத் தொடங்கினர். 
 
ராமர் கோயிலுக்குச் செல்லும் பிரதான சாலையான 13 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ராமர் பாதை முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இன்று காலை கோயில் திறக்கப்பட்டதை அடுத்து பக்தர்கள் பகவான் ராமரை தரிசித்து வருகிறார்கள்.
 
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் அயோத்தி நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் மூலமாகவும், பாத யாத்திரையாகவும் பக்தர்கள் அயோத்திக்கு வந்த வண்ணம் உள்ளனர். 

ALSO READ: மக்களவை தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் முக்கிய தகவல்..!!
 
ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி பக்தர்கள் பலர் காயமடைந்த நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  மேலும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் உத்திரபிரதேச மாநில போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்