ஒடிசா மாநிலம் நயாகர் மாவட்டம் படதேகர் என்ற கிராமத்தில் உள்ள மலை உச்சியில் அதாவது அயோத்தியில் இருந்து 1000 கிமீ தூரத்தில் மற்றொரு ராமர் கோவில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தில் ராமர் கோவில் பிராணண பிரதிஷ்டை விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில், பிரதமர் மோடி பால ராமர் சிலைக்கு பூஜை செய்தார். அதன்பின்னர், உ.பி., முதல்வர் யோகி ஆதித்ய நாத், ஆளுநர் ஆனதிபென் படேல், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் பூஜை செய்து வழிபட்டனர்.
இந்த நிகழ்ச்சியையொட்டி, நாடு முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், அயோத்தியில் இருந்து 1000 கிமீ தூரத்தில் மற்றொரு ராமர் கோவில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள மக்கள் மற்றும் பக்தர்கள் அளித்த நன்கொடை மூலம் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது.
ஒடிசா கட்டிடக்கலை பாணியில்,தாரா தாரிணி மற்றும் கோணார்க் கோவில்களின் கட்டிட அமைப்பு மாதிரி இக்கோவில் கட்டமும் கோவில் கருவறை 65 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.
முக்கிய கோவிலைச் சுற்றி சூரிய கடவுள், இவன் விநாகயகர், அனுமான் ஆகிய கடவுள்களுக்கு தனித்தனியா சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.