உயரும் எண்ணிக்கை: 21 நாள் ஊரடங்கு உதவுமா??

Webdunia
புதன், 25 மார்ச் 2020 (10:15 IST)
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 562 ஆக உயர்ந்துள்ளது. 
 
சீனாவில் உருவெடுத்த கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதிலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 18 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
 
குறிப்பாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 562 ஆக உயர்ந்துள்ளது, கொரோனாவுக்கு குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 41 என மத்திய சுகாதார அமைச்சகம் சற்றுமுன் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இந்த தொற்று மேலும் பரவாமல் இருக்கு நள்ளிரவு முதல் நாடு முடுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், மக்கள் கடைபிடிக்க வேண்டியவை என்னவென விழிப்புணர்வாக அந்தந்த மாநில அரசுகள் சொல்லி வருகின்றன. அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கொரோனா பாதிப்பு எண்ணிகை பெரிய அளவு வளர விடாமல் கட்டுக்குள் வைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்