நாடு முழுவதும் காலியாக உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது என்பது தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில் தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் 37 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனை அடுத்து 18 இடங்களுக்கான தேர்தல் நாளை நடைபெற இருந்தது
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து திடீரென ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது ராஜ்யசபா தேர்தலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசு எடுத்துள்ள ஊரடங்கு உத்தரவு நடவடிக்கை காரணமாக மாநிலங்களை தேர்தலை ஒத்தி வைத்து இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.