மத சண்டை வராமல் இருக்க பள்ளிகளில் பகவத் கீதை சொல்லித்தர வேண்டும்! - அண்ணாமலை!

Prasanth Karthick

திங்கள், 31 மார்ச் 2025 (11:25 IST)

நாட்டில் மத சண்டை, மோதல்கள் இல்லாமல் இருக்க மாணவர்களுக்கு பள்ளி பருவத்திலேயே மதம் பற்றிய அடிப்படை பாடங்களை கொடுக்க வேண்டும் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

 

கோவை மாவட்டம் மதுக்கரையில் உள்ள தனியார் பள்ளியின் ஆண்டு விழாவில் கலந்துக் கொண்டு பேசிய பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை “கற்றல் என்பது பள்ளிகளில் 20 சதவீதம் கிடைக்கிறது. 80 சதவீதம் வெளியேதான் கிடைக்கிறது. மாணவர்களுக்கு அறிவை ஊட்ட வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கும் உள்ளது.

 

இங்கே செக்யூலர் எஜுகேசன் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். எந்த மதத்தை பற்றியும் பேசாமல் இருப்பது செக்யூலர் எஜுகேஷன் அல்ல. எந்தவொரு மதத்தையும் சிறுமைப்படுத்தாமல் இருப்பதே செக்யூலர் எஜூகேஷன்.

 

இன்றைக்கு ஒரு மதத்தை சார்ந்த, எல்லா மதத்தையும் சொல்லித்தரக்கூடிய ஒரு கல்வி பள்ளிகளில் இருக்க வேண்டும். அரசு சொன்னாலும், சொல்லாவிட்டாலும் பகவத் கீதையின் 18 அத்தியாயங்களையும் மாணவர்களுக்கு சொல்லித்தர வேண்டும். 8 முதல் 12ம் வகுப்பு வரை அந்த குழந்தைக்கு ஸ்லோகங்கள் தெரிந்திருக்கும்.

 

பகவத் கீதையின் உட்பொருள் தெரிந்திருக்கும். மகாபாரதம் சொல்லித்தர வேண்டும். அவற்றை நாடகமாக மாணவர்கள் நடிக்க செய்ய வேண்டும். குரானில் என்ன சொல்கிறார்கள்? பைபிளில் என்ன சொல்கிறார்கள்? என்ற அனைத்து மதத்தின் அடிப்படையும் அந்த குழந்தைக்கு தெரிந்திருக்க வேண்டும்.

 

அப்படிப்பட்ட மத அடிப்படை புரிதலை ஏற்படுத்தினால்தான் அந்த குழந்தை எல்லாரையும் சகோதரனாக, சகோதரியாக, எல்லா மனிதனையும் சமமாக பார்க்கும். மற்ற மதங்களில் உள்ள நல்ல விஷயங்களை கையில் எடுக்கும். 12ம் வகுப்பிற்குள் என்ன மனது அவர்களுக்கு உருவாகிறதோ அதுதான் அவர்களிடையா வாழ்க்கை” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்