தியேட்டர்கள், மால்கள், கல்வி நிறுவனங்கள், கல்யாண மண்டபங்கள் அனைத்தும் கடந்த சில நாட்களாகவே உலகம் முழுவதும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்துவரும் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டு நிறுவனங்களும் கொரோனா வைரஸ் எதிரொலியாக அதிரடியாக ஒரு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது
இதன்படி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆன்லைன் விற்பனைத்தளமான பிளிப்கார்ட் நிறுவனம் இந்தியாவில் தனது சேவையை தற்காலிகமாக நிறுத்த போவதாக அறிவித்துள்ளது. இதனால் எந்த ஆர்டர்களும் அடுத்த அறிவிப்பு வெளிவரும் வரை பெறப்படாது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் அமேசான் நிறுவனம் பேக் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் ஆகியவை மட்டும் ஆர்டர் பெற்று டெலிவரி செய்யப்படும் என்றும் மற்ற பொருள்களின் ஆர்டர்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் அறிவித்துள்ளது