இந்தியா கூட்டணிக்கு செல்ல மாட்டேன்.. சந்திரபாபு நாயுடு உறுதி..!

Siva
புதன், 5 ஜூன் 2024 (11:44 IST)
சந்திரபாபு நாயுடு மற்றும் நிதீஷ் குமார் ஆகிய இருவரும் இந்தியா கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் இந்தியா கூட்டணி கட்சியின் தலைவர்களில் சிலர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. 
 
ஆனால் அதே நேரத்தில் சந்திரபாபு நாயுடு பாஜகவிடம் முக்கிய துறைகள் வேண்டும் என்று நிபந்தனை விதித்து கொண்டிருப்பதாகவும் அது குறித்த பேச்சு வார்த்தையும் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் டெல்லியில் இன்று பாஜக கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் அதில் கலந்து கொள்வதற்காக சந்திரபாபு நாயுடு டெல்லி செல்ல உள்ளார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது ’தேசிய ஜனநாயக கூட்டணியுடன் பயணிப்பதில் உறுதியாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். இதில் இருந்து அவர் இந்தியா கூட்டணிக்கு செல்ல மாட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
மேலும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து கூட்டணி கட்சிகளுடன் கலந்து ஆலோசனை முடிவு செய்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்