எதிர்த்து போட்டியிட்ட அனைவருக்கும் டெபாசிட் காலி.. சசிகாந்த் செந்தில் சாதனை வெற்றி..!

Siva

புதன், 5 ஜூன் 2024 (09:13 IST)
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமை காங்கிரஸ் கட்சியின் சசிகாந்த் செந்தில் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. 
 
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக சசிகாந்த் செந்தில் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்ட நிலையில் அவர் சுமார் 8 லட்சம் வாக்குகள் அதாவது 796956 வாக்குகள் பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் பாலகணபதி பெற்ற வாக்குகள் 224801 என்பது தேமுதிக நல்ல தம்பி பெற்ற வாக்குகள் 223904 என்பதும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெகதீஷ் பெற்ற வாக்குகள் 120838 என்பது குறிப்பிடத்தக்கது. 
 
572155வாக்குகள் வித்தியாசத்தில் சசிகாந்த் செந்தில் வெற்றி பெற்றுள்ளார் என்பதும் அவரை எதிர்த்து போட்டியிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் கண்டிப்பாக சசிதாந்த் செந்திலுக்கு முக்கிய பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்