டெல்லி சட்டமன்ற தேர்தல்: கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் அறிவிப்பு..!

Mahendran
சனி, 4 ஜனவரி 2025 (15:42 IST)
டெல்லியில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அனைத்து 70 தொகுதிகளுக்கும் ஆம் ஆத்மி கட்சி ஏற்கனவே தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்நிலையில், பாஜக தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டது. இதில் 29 வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

முதல்வர் பதவியை கெஜ்ரிவால் இழந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சி சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், இந்த தேர்தல் அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. கட்சியின் தலைவர் கெஜ்ரிவால் புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல், முதல்வர் அதிஷி கல்காஜி என்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், பாஜக வேட்பாளர் பட்டியலில், அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து, முன்னாள் எம்பி மற்றும் முதல்வர் சாகித் சிங் வர்மாவின் மகன் பரமேஷ் வர்மா போட்டியிடுகிறார். அதேபோல், முதல்வர் அதிஷியை எதிர்த்து பாஜக மூத்த தலைவர் ரமேஷ் பிதுரி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் ராஜ்குமார் ஆனந்த் மற்றும் கைலாஷ் கெலாட் ஆகியோர்களுக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது.


Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்