விஷச் சாராயம் குடித்த 69 பேர் பலி... பொதுமக்கள் பீதி...

Webdunia
சனி, 23 பிப்ரவரி 2019 (17:22 IST)
அசாம் மாநிலத்தில் விஷச் சாராயம் அருந்திய 69 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரவாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகின்றன.
அசாம் மாநிலத்தில் கிழக்கு பகுதியில் கோலாஹைட் என்ற மாவட்டத்தில் தேயிலை தோட்டம் அதிகளவில் உள்ளன. இதில் அங்குள்ள பகுதியில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வேலை செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில் நேற்று முந்தினம் இப்பகுதியில் ஒரு திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொண்ட ஆண்கள் பலர் விஷத்தன்மை கொண்ட சாராயத்தை அருந்தியுள்ளனர்.
ஆனால் இதை பருகிய சிறிய நேரத்திலேயே சிலருக்கு  ரத்த வாந்தி எடுத்து மயங்கி உள்ளனர். இந்நிலையில் இவர்கள் அனைவரும் ஜோர்ஹோட்டில் உள்ள  பல மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
 
இதில் தற்போது வரை பலி எண்ணிக்கை 69ஆக அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும் 50 பேர் தொடர்ந்து திவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இந்த கள்ளச் சாராயத்தை விற்பனை செய்தத இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலால்துறையைச் சேர்ந்த 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்  செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.                                             

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்