கணவருடன் தகராறு ...கடிதம் எழுதிவைத்து இரண்டு மகன்களைக் கொன்ற தாய்...

செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (16:14 IST)
கடலூர் அருகே உள்ள பாதிரிகுப்பத்தை சேர்ந்தவர் மதிவாணன் (40) . இவர் அதே பகுதியில் ஒரு மருந்தகம் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவியின் பெயர் சிவசங்கரி (35) இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இந்த தம்பதிக்கு பாவேஷ்கண்ணா(12) என இரு மகன்கள் இருந்தனர்.அவர்கள் அருகில் உள்ள பள்ளியில் படித்துவந்தனர்.
சில வருடங்களாகவே கணவன் மனைவிக்குள்  அடிக்கடி தகராறு எழுந்தது. இதனால் மனம் உடைந்த சிவசங்கரி தன் கணவர் மதிவாணன் கடைக்குச் சென்றுள்ளார்.பின்னர் இரவு தான் வீட்டுக்கு திரும்பியுள்ளார். வீட்டுக்கு வந்தவர் கதவை நெடுநேரமாக தட்டியும் மனைவி கதவை திறக்காததால் சந்தேகம் அடைந்து ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளனர்.
 
அப்பொது சிவசங்கரி தூக்கில் தொங்கியபடி இருந்ததை பார்த்து அதிர்ச்சியுற்றார். பின்னர் சிலரின் உதவியுடன் வீட்டுக்கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார்.அப்போது மகன்கள் இரண்டு பேரும் மலர்வளையத்தால் அலங்கரிக்கப்பட்டு இறந்து கிடந்தனர்.
 
சிவசங்கரியும் அருகில் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். மகன்களுக்கு விஷம் வைத்து விட்டு அவர் தற்கொலை செய்திருப்பதாக தெரியவந்தது. பின்னர் ஒரு கடிதம் கிடைத்தது அதில் என் கணவர் மிகவும் பொறுமையானவர். அவருக்கு நான் தான் தொல்லை தந்துவிட்டேன், அதனால் நான் சாகப்போகிறேன். இவ்வாறு அந்தக் கடிதத்தில்  எழுதியிருந்தது.கணவரை என் மகன்களும் தொல்லை செய்யக்கூடாது என்றே என் மகன்களை என்னோடு அழைத்துபோகிறேன் என்று எழுதிவைத்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்