’பிரியாணியில் பீஸ்’ கேட்டதற்கு இளம்பெண் கழுத்தறுத்து கொலை...

செவ்வாய், 19 பிப்ரவரி 2019 (11:28 IST)
கோயம்பேடு பூ மார்கெட்டில் இளம்பெண் ஒருவர் கழுத்து அறுத்த நிலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் நேற்று முன் தினம் இரவில் சினிமா படப்பிடிப்பு நடைபெற்றது.அதில் கலந்து கொண்டவர்கள் எல்லாம் அப்பகுதியில் நடந்து சென்ற போது இளம் பெண் ஒருவர் கழுத்து அறுபட்ட நிலையில் ரத்தம் சிதறி பிணமாக கிடந்துள்ளார்.
 
இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு உடற்கூறு சோதனைக்காக  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இதுகுறித்து போலீஸார விசாரித்த போது, நேற்று முந்தினம் இரவில் இளம்பெண் (25) ஒருவர் மதுஅருந்திய ஒரு ஆணுடன் அதே பகுதியில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டதாகவும், அப்போது பிரியாணியில் இறைச்சி இல்லை என கேட்டு வாக்குவாதம் செய்ததாகவும் தெரிகிறது.
 
சில நிமிடங்களில் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் வந்து பார்த்த போது அப்பெண் கழுத்தறுபட்டநிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளார்.அவருடன் அமர்ந்து சாப்பிட்ட நபர் ஓடிவிட்டதாக தெரிகிறது. 
 
இந்நிலையில் அந்த நபரை பற்றி அருகில் உள்ளவர்களிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். மேலும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் அந்த நபர் உருவம் பதிவாகி உள்ளதாக என்று ஆய்வு செய்துவருகின்றனர்.
 
பிரியாணி சாப்பிடும் போது ஏற்பட்ட தகராறில் இளம் பெண் கொலை செய்யப்பட்டாரா இல்லை வேறு ஏதேனும் காரணம் உண்டா என்பது பற்றி போலீஸார் விசாரித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்