50 டிகிரி செல்சியஸ் வெப்பம்.. வெப்ப அலை எதிரொலி: 144 தடை உத்தரவால் அமல்..!

Siva
திங்கள், 27 மே 2024 (06:30 IST)
மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா, டெல்லி, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் ஆகிய 10 மாநிலங்களில் வெப்ப அலை வீசி வருவதாகவும், குறிப்பாக ராஜஸ்தானில்நேற்று 50 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேலும் ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் 22 பேர் வெப்ப அலை காரணமாக உயிரிழந்து உள்ளதாகவும், மத்திய பிரதேசத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் மகாராஷ்டிராவின் அகோலா நகரில் நேற்று 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானதை அடுத்து அந்ந்கரில் 144 தடை உத்தரவு அமல் செய்யப்பட்டு உள்ளது. மதிய நேரத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் ராஜஸ்தானில் தூய்மைப் பணியாளர்கள் அதிகாலை 5 மணி முதல் காலை 10 மணி வரை மட்டும் வேலை செய்தால் போதும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்