பெஹல்காம் தாக்குதல் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த வாரம் பங்குச்சந்தை சரிந்தது என்பதும், குறிப்பாக வெள்ளிக்கிழமை படுமோசமாக சரிந்தது என்பதையும் பார்த்தோம். ஆனால் இன்று, வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை ஏற்றம் கண்டு இருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்ந்து 79 ஆயிரத்து 702 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை நிப்பாட்டி 123 புள்ளிகள் உயர்ந்து 24,173 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தையில் ஆக்சிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், சிப்லா, எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, ஸ்டேட் வங்கி, சன் பார்மா, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
அதேபோல், டெக் மகேந்திரா, டி சி எஸ், ஸ்ரீராம் பைனான்ஸ், மாருதி, ஐடிசி, இன்போசிஸ், ஹிந்துஸ்தான் லீவர், ஹீரோ மோட்டார், எச் சி எல் டெக்னாலஜி, பஜாஜ் பைனான்ஸ், ஆசியன் பெயிண்ட் உள்ளிட்ட பங்குகள் சரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.