மே 31 வரை கனமழை.. இன்று 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

Mahendran

சனி, 25 மே 2024 (15:19 IST)
தமிழகம் மற்றும் புதுவையில் மே 31ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்று மூன்று மாவட்டங்களுக்கு அதிக மழை பெய்யும் என்ற எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது என்றதும் குறிப்பாக வங்க கடலில் தோன்றி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற இருப்பதை அடுத்து தமிழக கடற்கரையோர பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் இன்று காலை ஏழு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் சற்று முன் மூன்று மாவட்டங்களுக்கு கன மழை பெய்யும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று கூறிய சென்னை வானிலை ஆய்வு மையம் மே 31ஆம் தேதி வரை தமிழகம் புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்