கரையை கடக்க தொடங்கியது ரெமல்’ புயல்.. கொல்கத்தாவில் கனமாழி

Siva
திங்கள், 27 மே 2024 (06:13 IST)
ரெமல்’ புயல் கரையை கடக்க தொடங்கி உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில்  புயல் கரையை கடக்க தொடங்கி உள்ளதால் கொல்கத்தா மற்றும் அதனை சுற்றிய  இடங்களில் கனமழை பெய்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.
 
வடக்கு வங்காளவிரிகுடாவில் அதிதீவிர புயலாக உருவான ‛ரெமல்’ கரையை கடக்க தொடங்கி உள்ளதாகவும் இன்னும் சில மணிநேரத்தில் மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே ‛ரெமல்’ புயல் கரையை கடக்கிறது என்றும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவு - வங்கதேசத்தின் கேப்புப்பாரா இடையே ‛ரெமல்’  புயல் கரையை கடக்கிறது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னால் தென்மேற்கு வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் புயலாக மாறியது என்பதை பார்த்தோம். 
 
இந்த புயல் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நகர்ந்து தற்போது கொல்கத்தா அருகே கரையை கடந்துள்ள நிலையில் அங்கு கன மழை பெய்து வருவதாகவும் மீட்பு படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் கூடுதல் பாதுகாப்பு படைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
புயல் கரையை கடந்ததும் சேதமான பகுதிகளில் உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கப்படும் என்றும் கொல்கத்தா மாநகராட்சி தெரிவித்துள்ளது. 
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்