அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Siva

ஞாயிறு, 26 மே 2024 (15:05 IST)
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 
மேலும் குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
 
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் குளிர்ந்த வெப்பநிலை இருந்த நிலையில் தற்போது படிப்படியாக மீண்டும் வெப்பநிலை உயரும் என்று கூறி இருப்பது பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்