கடந்த வார பெரும் சரிவுக்கு பின் ஏற்றத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Siva
திங்கள், 7 அக்டோபர் 2024 (09:57 IST)
கடந்த வாரம் இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தை படு பாதாளத்திற்கு சென்ற நிலையில் இன்று மீண்டும் பங்குச்சந்தை உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை பங்குச் சந்தை சற்றுமுன் வர்த்தகத்தை தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 265 புள்ளிகள் உயர்ந்து 81960 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது அதே போல் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 60 புள்ளிகள் உயர்ந்து 25 ஆயிரத்து 73 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

இன்றைய பங்குச்சந்தை இன்னும் உயரும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்றைய பங்குச்சந்தையில் ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், ஹெச்சிஎல் டெக்னாலஜி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் ஆசியன் பெயிண்ட், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹிந்துஸ்தான் லீவர், சன் பார்மா, டாட்டா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் சரிந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்