உயர்ந்து கொண்டே வரும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

Siva

வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (11:18 IST)
பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டிருந்த நிலையில், முதலீட்டாளர்கள் பெரும் லாபம் அடைந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலைய்ல் இன்று பங்குச்சந்தையில் பெரிய அளவில்  ஏற்றம் அல்லது இறக்கம் இல்லையென்றும், கிட்டத்தட்ட நேற்றைய விலையில் தான் பங்குகள் விற்பனை ஆகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்றைக்கு வெறும் 10 புள்ளிகள் மட்டுமே குறைந்து, 85,795 புள்ளிகளில் வர்த்தகம் நடக்கிறது. அதேபோல், தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 15 புள்ளிகள் உயர்ந்து, 26,230 புள்ளிகளில் வர்த்தகம் செய்கிறது.
 
இன்றைய பங்குச் சந்தையில் பெரிய அளவில் ஏற்றமோ இறக்கமோ இல்லாததால், முதலீட்டாளர்கள் மிகவும் கவனமாக இன்று வர்த்தகம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
இன்றைய பங்குச் சந்தையில் ஆசியன் பெயின்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், ஹிந்துஸ்தான் லீவர் ஆகிய பங்குகள் உயர்ந்ததாகவும், பாரதி ஏர்டெல், HDFC வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோடக் வங்கி ஆகிய பங்குகள் குறைந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்