இன்று ஒரே நாளில் 520 ரூபாய் குறைந்தது தங்கம் விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

Siva
வியாழன், 19 டிசம்பர் 2024 (11:23 IST)
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ஒரு சவரனுக்கு 520 குறைந்துள்ளதை அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் தங்கத்தில் முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு 65 ரூபாயும் ஒரு சவரனுக்கு 520 ரூபாய் குறைந்துள்ள நிலையில் இன்றைய விலை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 65 ரூபாய் குறைந்து ரூபாய்   7,070 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 520 குறைந்து ரூபாய்  56,560 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,713 எனவும் ஒரு சவரன் ரூபாய் 61,704 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 99.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  99,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்