சென்னையில் விட்டு விட்டு பெய்யும் கனமழை: விடுமுறை இல்லாததால் மாணவர்கள் அவதி..!

Mahendran

வியாழன், 19 டிசம்பர் 2024 (10:29 IST)
சென்னையில் நேற்று முதல் விட்டு விட்டு மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வரும் நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை. இதனால், மாணவர்கள் மழையில் நடந்து கொண்டே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மேலும் வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ள நிலையில், டிசம்பர் 23ஆம் தேதி வரை சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதிகாலை முதல் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. சென்னையில் ஒரு சில பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் ஊழியர்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  மழையில் நனைந்தபடி மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், மேகமூட்டம் காரணமாக சாலைகளில் வெளிச்சமின்மை நிலவுவதால், முகப்பு விளக்குகளை விட்டபடி வாகனங்கள் சென்று கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது.



Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்