வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. ஆந்திரா நோக்கி நகர்கிறதா?

Mahendran

புதன், 18 டிசம்பர் 2024 (12:57 IST)
வங்க கடலில் உருவான கீழடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவான நிலையில், தற்போது அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது போல், சமீபத்தில் அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதன் பின்னர் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரும் என கணிக்கப்பட்டது.

இதன் காரணமாக, சென்னை உள்பட தமிழ்நாட்டில் உள்ள கடற்கரை மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உண்டு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், சற்றுமுன் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னைக்கு நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்