நேற்று பங்குச்சந்தை உயர்ந்த நிலையில் இன்று திடீரென மீண்டும் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதையும் குறிப்பாக கடந்த வாரம் பங்குச்சந்தை படுவீழ்ச்சியான நிலையில் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்தனர் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் நேற்று பங்குச்சந்தையின் சென்செக்ஸ் சுமார் 300 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்த நிலையில் இன்று திடீரென 170 புள்ளிகள் சார்ந்து 63,941 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
அதேபோல் தேசிய பங்கு சந்தை இன்றைய 50 புள்ளிகள் குறைந்து 19090 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. பங்குச்சந்தை இன்னும் சில நாட்களுக்கு ஏற்ற இறக்கத்துடன்தான் இருக்கும் என்பதால் புதிதாக முதலீடு செய்பவர்கள் முதலீடு செய்ய வேண்டாம் என்றும் ஏற்கனவே முதலீடு செய்தவர்கள் மிகவும் கவனத்துடன் பங்குச்சந்தையை கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.