தொடர் சரிவில் பங்குச்சந்தை.. மீண்டும் எப்போது மீளும்?

வெள்ளி, 20 அக்டோபர் 2023 (10:52 IST)
பங்குச்சந்தை இந்த வாரத்தில் மூன்று நாட்கள் சரிந்த நிலையில் இன்றும் சரிந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் அச்சத்தை அளித்துள்ளது.  
 
இன்று காலை பங்குச்சந்தை ஆரம்பம் ஆனதிலிருந்தே சரிவில்தான் இருந்து வருகிறது. மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 170 புள்ளிகள் சரிந்து 65,453 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 60 புள்ளிகள் சரிந்து 19,562 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. பங்கு சந்தை தொடர்ச்சியாக சரிந்து வருவது முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை தெரிவித்தாலும் நீண்ட கால அடிப்படையில் பங்குச்சந்தை உயர அதிக வாய்ப்பு உள்ளதாக பங்குச்சந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் 
 
புதிதாக பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் மிகுந்த கவனத்துடன் தகுந்த ஆலோசனை பெற்ற முதலீடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்