மீண்டும் வருகிறது TATA NANO! வேற Level டிசைன்.. அதே குறைந்த விலை!! - அசர வைக்கும் தகவல்!

Prasanth Karthick

செவ்வாய், 13 மே 2025 (13:23 IST)

டாடா நிறுவனத்தில் ஏழைகளின் கார் என்று பெயர் பெற்ற டாடா நானோ மீண்டும் சந்தையில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. 

 

இந்தியாவின் கோடீஸ்வரர்களில் ஒருவரான மறைந்த ரத்தன் டாடாவின் கனவுகளில் ஒன்று ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கார் இருக்க வேண்டும் என்பது. நடுத்தர மக்களும் கூட கார் பயன்படுத்த பொருளாதார தடை இல்லாதவாறு மிகவும் குறைந்த விலையில் கார் மாடல் ஒன்றை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வெளியான கார்தான் டாடா நேனோ. 

 

பார்ப்பதற்கு சுண்டெலி போல தோற்றம் தரும் நானோ 2009ம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது ரூ.1 லட்சம் என்ற விலையில் அறிமுகமான இந்த காரை வாங்க நடுத்தர மக்கள் மிகவும் விருப்பம் காட்டினார்கள். முதல் சில ஆண்டுகளுக்கு லட்சக்கணக்கான யூனிட்களில் விற்பனையான நானோ கார்கள் பின்னர் விற்பனையில் சரிவை சந்தித்ததன. அதன்பின்னர் 2019ம் ஆண்டில் நானோ கார் தயாரிப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

 

இந்நிலையில் தற்போது மீண்டும் நானோ கார் 2.0 திட்டத்தை கையில் எடுக்க டாடா ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபமாக வெளியாகும் கார்களை போலவே கவரும் வகையிலான டிசைனில் ரூ.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் மதிப்பீட்டிற்குள் அனைவரும் வாங்கும் அளவில் நானோ 2.0 வெளியாக உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. ஆனால் இதுகுறித்து டாடா அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதையும் வெளியிடாத நிலையில் இது வெறும் Rumour ஆகவே தொடர்ந்து வருகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்