இதேவேளை, தமிழகத்தில் கடும் வெயிலால் மக்கள் தவிப்பை சந்தித்து வருகின்றனர். சில இடங்களில் இரவு நேரத்தில் ஓரளவு மழை பெய்தாலும், வெப்பம் குறையாமல் தொடர்கிறது.
வேலூர், கரூர் போன்ற பகுதிகளில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், மக்கள் வீடுகளுக்குள் இருப்பதற்கே முன்னுரிமை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், பருவமழை சீக்கிரமே தமிழ்நாட்டையும் பசுமையாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அறிகுறியாக, தெற்கு அந்தமான், நிக்கோபார் தீவுகள் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் பருவமழை மெல்ல படியென ஆரம்பித்துள்ளது.