பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு! சாகும் வரை ஆயுள் தண்டனை! - பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு!

Prasanth Karthick

செவ்வாய், 13 மே 2025 (13:05 IST)

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம் தற்போது தண்டனை விவரங்களை வெளியிட்டுள்ளது.

 

கடந்த 2019ம் ஆண்டு பொள்ளாச்சியில் பல இளம்பெண்கள் சில கும்பலால் நிர்வாணமாக படமெடுக்கப்பட்டும், அடித்து உதைத்து மிரட்டப்பட்டும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த வன்கொடுமை விவகாரத்தில் விசாரணையில் ஏராளமான பெண்கள் முன் வந்து குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சி சொன்னார்கள்.

 

பல வகையில் குற்றச்சாட்டுகள் நிரூபணமான நிலையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரையும் குற்றவாளிகளாக அறிவித்த கோவை மகளிர் நீதிமன்றம், அவர்களுக்கு சாகும் வரையில் ஆயுள் தண்டனை அளித்து உத்தரவிட்டுள்ளது. 

 

மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம் வரை இழப்பீடாக கிடைக்கும் என கூறப்படுகிறது. நீண்ட நாள் காத்திருப்புக்கு பின் வெளியான இந்த தீர்ப்பை அப்பகுதியில் பலரும் பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்